இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகளின் பட்டியல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கடைசி வரை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இங்கிலாந்து 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒரு ரன் கூடுதலாக அடித்து சேவாக் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
பின்னர், 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
சாதனை: 1
ஆஷஸில் கடைசி வரை போராடி வெற்றி பெற்ற அணிகள்:
இங்கிலாந்து – ஓவல் – 1901 - 1 விக்கெட் வித்தியாசம்
இங்கிலாந்து – மெல்போர்ன் 1907-08 – 1 விக்கெட் வித்தியாசம்
இங்கிலாந்து – ஹெடிங்கிலி – 2019 – 1 விக்கெட் வித்தியாசம்
இங்கிலாந்து – ஓவல் – 1890 - 2 விக்கெட் வித்தியாசம்
ஆஸ்திரேலியா – ஓவல் – 1907 - 08 – 2 விக்கெட் வித்தியாசம்
ஆஸ்திரேலியா – எட்ஜ்பாஸ்டன் – 2023 – 2 விக்கெட் வித்தியாசம்
சாதனை: 2
ஆஷஸில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா:
404 ரன்கள் – ஹெடிங்கிலி – 1948
315 ரன்கள் – அடிலைடு – 1901/02
286 ரன்கள் – மெல்போர்ன் – 1928/29
281 ரன்கள் – எட்ஜ்பாஸ்டன் - 2023
275 ரன்கள் – சிட்னி – 1897/98
சாதனை: 3
ஆதிக சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலியா கேப்டன்கள்:
6 சிக்ஸர்கள் – ரிக்கி பாண்டிங் – நியூசிலாந்து – ஆக்லாந்து, 2005
5 சிக்ஸர்கள் – பேட் கம்மின்ஸ் – இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன் - 2023
4 – சிக்ஸர்கள் – இயான் சேப்பல் – பாகிஸ்தான் – அடிலைடு, 1972
கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாமா? காயத்துக்கு மருந்து கூட போடக் கூடாதா? ஐசிசியை விளாசிய பிராட் ஹாக்!
சாதனை: 4
9ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து வெற்றி
81 – விவிஎஸ் லட்சுமணன் – இஷாந்த் சர்மா – இந்தியா vs ஆஸ்திரேலியா, மொஹாலி – 2010
61 ரன்கள் – ஜேஃப் டூஜான் – வின்ஸ்டன் பெஞ்ஜமின் – வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான் – பிரிஜ்டவுன் – 1998
56 ரன்கள் – டிப்பி கோட்டர் – கெர்ரி ஹஸ்லிட் – ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து – சிட்னி – 1907
55 ரன்கள் – பேட் கம்மின்ஸ் – நாதன் லயான் – ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து – 2023
54 ரன்கள் - பிரையன் லாரா – கர்ட்லி ஆம்ப்ரோஸ் – வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா – பிரிஜ்டவுன் - 1999
சாதனை: 5
80 ரன்கள் + 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்கள்
பாப் சிம்ஸன் - 4 முறை
ஜார்ஜ் ஜிப்பென் – 2 முறை
வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங்
ரிச்சி பெனாட்
அலான் பார்டர்
பேட் கம்மின்ஸ்
சாதனை: 6
அதிக ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்துக்கு டூர் வந்த அணிகள்:
404 ரன்கள் – ஆஸ்திரேலியா, ஹெட்டிங்கிலி – 1948
342 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் – லார்டு – 1984
322 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் – ஹெட்டிங்கிலி – 2017
281 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா – எட்ஜ்பாஸ்டன் - 2008
281 ரன்கள் – ஆஸ்திரேலியா - எட்ஜ்பாஸ்டன் - 2023
இது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் 275 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை சேஸ் செய்த 15வது வெற்றிகரமான ரன் சேஸ் ஆகும். இதில் 5 கடந்த 2022ஆம் ஆண்டு முதல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.