ஒரு ரன் கூடுதலாக அடித்து சேவாக் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இங்கிலாந்து 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஆஸி, வீரர் டேவிட் வார்னர் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த ஆண்டுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் இங்கிலாந்தில் எந்த சாதனையையும் படைத்தது கிடையாது.
புவனேஷ்வரன், ரஹேஜாவால் முதல் வெற்றியை பெற்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்!
இந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் முதல் இன்னிங்ஸில் 9 ரன்னும், 2ஆவது 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக வார்னர் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் வார்னர் 5ஆவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் 99 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 8207 ரன்கள் அடித்துள்ளார். டேவிட் வார்னர் 15 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 8208 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெஸ்டைர் குக் 11,845 ரன்கள் எடுத்து நம்பர் 1 இடத்திலும், சுனில் கவாஸ்கர் 9607 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், கிரேம் ஸ்மித் 3ஆவது இடத்திலும், ஹைடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாமா? காயத்துக்கு மருந்து கூட போடக் கூடாதா? ஐசிசியை விளாசிய பிராட் ஹாக்!