புவனேஷ்வரன் வேகத்தில் சுருண்ட நெல்லை ராயல் கிங்ஸ் 124க்கு ஆல் அவுட்; வெற்றி பெறுமா திருப்பூர் தமிழன்ஸ்?

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Nellai Royal Kings Scores 124 runs against IDream Tiruppur Tamizhans in 10th Match of TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 12 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பல அற்புத நிகழ்வுகளும் இதுவரையில் நடந்த போட்டிகளில் நடந்துள்ளது. இதில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் ஒரு ஓவரில் 4 நோபால் மற்றும் ஒரு வைடு உள்பட ஒரு பந்தில் மட்டும் 18 ரன்கள் கொடுத்துள்ளார்.

இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓவரில் பேட்ஸ்மேன் டிஆர் எஸ் கேட்டுள்ளார். அதில் திருப்தி இல்லாத அஸ்வின் மீண்டும் அதே பந்துக்கு டிஆர்எஸ் கேட்டுள்ளார். இறுதியில் நாட் அவுட் வந்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனில் இடம் பெற்றுள்ள 8 அணிகள் 28 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதியாக முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும். தற்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் 2 போட்டியில் வெற்றி பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளது.

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் 2 போட்டியிலும் தோல்வி கண்டு 8ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான10ஆவது டிஎன்பிஎல் லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சோனு யாதவ் 35 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அஜிதேஷ் குருசாமி 20 ரன்களும், ரித்திக் ஈஸ்வரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பந்து வீச்சு தரப்பில் புவனேஷ்வரன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), எஸ் ராதாகிருஷ்ணன், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், பாலசந்தர் அனிருத்,  ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர், எஸ் அஜித் ராம், அல்லிராஜ் குப்புசாமி, பி புவனேஸ்வரன், ஜி பெரியசாமி.

நெல்லை ராயல் கிங்ஸ்:

ஸ்ரீ நிரஞ்சன், அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசாமி, ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), சோனு யாதவ், எஸ் ஜே அருண் குமார், லக்‌ஷய் ஜெயின், சந்தீப் வாரியர், லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், எம் பொய்யாமொழி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios