கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாமா? காயத்துக்கு மருந்து கூட போடக் கூடாதா? ஐசிசியை விளாசிய பிராட் ஹாக்!
மொயீன் அலி கையில் ஏற்பட்ட காயத்திற்கு திரவம் போன்ற மருந்தை நடுவரிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்திய நிலையில், நேர்மைக்கு புறம்பாக அவர் நடந்து கொண்டதாக அவருக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்து பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நெல்லையா? திருப்பூரா? டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!
பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இதில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஐந்தாம் நாளான போட்டி இன்று நடக்க இருந்த நிலையில், மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கையில், என்னை விட எனது அப்பா தான் அதிகம் பாதிக்கப்பட்டார் – ரவிச்சந்திரன் அஸ்வின்!
எனினுன், ஆஸ்திரேலியா வெற்றிக்கு இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் தொடர்ந்து மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போட்டி நடந்தால் கண்டிப்பாக ஆஸ்திரேலியா 174 ரன்களை எடுத்துவிடும். ஏழு விக்கெட் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும்.
இன்னொரு ரூ.10 கோடி சேர்த்துக்கோங்க: வைரலாகும் விராட் கோலியின் இன்ஸ்டா ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!
இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு ஐசிசி 25 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது. இந்தப் போட்டியின் 2ஆவது நாளின் 89ஆவது ஓவரின் போது கைகள் உலர்வாக இருப்பதற்காக மருந்து போன்ற திரவத்தை மொயீன் அலி நேர்மைக்கு புறம்பாக பயன்படுத்தியதாக நடுவர் புகார் செய்தார். இந்த புகாரைத் தொடர்ந்து ஐசிசி அவருக்கு போட்டியிலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் வெற்றிக்காக போராடும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: நெல்லை ராயல் கிங்ஸ் உடன் பலப்பரீட்சை!
போட்டியில் கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போன்ற திரவத்தை பயன்படுத்தினார். ஆனால், அதனை நடுவரிடம் கேட்காமல் பயன்படுத்தியதற்காக நேர்மைக்கு புறம்பான அடிப்படை விதிமுறைகளை மீறியதாக நடுவர் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளார். நடுவரது புகாரைத் தொடர்ந்து ஐசிசி மொயீன் அலிக்கு அபராதம் விதித்தது.
மேலும், பந்தை சேதப்படுத்தும் நோக்கில் அந்த மருந்தை பயன்படுத்தாத காரணம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மொயீன் அலிக்கு ஆதரவாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹக் களமிறங்கியுள்ளார். காயத்திற்காக வலி நிவாரணி பயன்படுத்திய மொயீன் அலிக்கு அபராதம் விதித்தது சரியானது அல்ல.
ஐசிசி மற்றும் நடுவர்கள் கூறுவது போன்று நேர்மைக்கு புறம்பாக மொயீன் அலி நடக்க நினைத்தால், மைதானத்திலேயே ஏன் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். நடுவர் புகார் அளித்திருப்பதற்காக ஐசிசி இப்படி கண்மூடித்தனமாக எந்த விசாரணையும் இல்லாமல் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.