இன்னொரு ரூ.10 கோடி சேர்த்துக்கோங்க: வைரலாகும் விராட் கோலியின் இன்ஸ்டா ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!

விராட் கோலியின் ஜிம் ஒர்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Virat Kohli new workout post goes viral in social media

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சச்சினுக்கு அடுத்து ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். உலகின் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவராகவும் இருக்கிறார். விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கார், பைக், வீடு, ஐபிஎல் வருமானம், பிசிசிஐ ஒப்பந்தம் ஆகியவற்றையும் தாண்டி விராட் கோலி இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் டுவிட்டர் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டுகிறார்.

முதல் வெற்றிக்காக போராடும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: நெல்லை ராயல் கிங்ஸ் உடன் பலப்பரீட்சை!

ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக விராட் கோலி ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதுமட்டுமின்றி ஒரே ஒரு டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈடுகிறார். இது தவிர மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடும், ஹரியானாவில் குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்திருக்கிறார். மேலும், ரூ.31 கோடிக்கும் அதிகளவில் விலை உயர்ந்த ஏராளமான கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.

ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் மாமியார் ஷீலா சிங்!

இவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1050 கோடி ஆகும். இந்த நிலையில் இதில் கூடுதலாக ரூ.10 கோடி சேர்க்கும் வகையில் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், அவர் கூறியிருப்பதாவது: நன்றாக வரப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த வீடியோவிற்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபிடிவிலியர்ஸ் மெசின் என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios