Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்யணும்..? ரூட் மேப்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்  புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது எப்படி என்று பார்ப்போம்.
 

explainer how team india qualify to icc wtc final
Author
First Published Dec 26, 2022, 7:47 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தொடரின் ஃபைனலுக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்று சாம்பியன்ஷிப் ஆனது.

வரையறுக்கப்பட்ட 2 ஆண்டுகள் காலக்கட்டத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றி சதவிகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். எனவே புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கிறது.

ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக வச்சுகிட்டு இதுதான் நீங்க ஃபீல்டிங் பண்ற லெட்சணமா..? கோலியை விளாசிய கவாஸ்கர்

2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய அணி 76.92 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக உள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி 58.93 சதவிகிதத்துடன்  தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறியது. 

54.55 சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும், 53.33 சதவிகிதத்துடன் இலங்கை 4ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணிக்கு போட்டியாக இருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் கடினமானதாக இருக்கும் என்பதால் அந்த அணிக்கு பின்னடைவு. அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

AUS vs SA: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26 தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுவது ஏன் தெரியுமா..?

அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இந்தியாவில் எதிர்கொள்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 3-1 அல்லது 3-0 என ஜெயித்தால் 62.50 என்ற சதவிகிதத்துடன் ஃபைனலுக்கு இந்திய அணி கண்டிப்பாக முன்னேறிவிடும். 2-1, 2-0 என ஜெயித்தால் கூட இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறலாம்.

அப்படியில்லாமல், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2-0, 3-0 என தோற்கும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி விகிதம் குறையும். அப்படி தோற்றால் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவிடம் தோற்பது மட்டுமல்லாது வெஸ்ட் இண்டீஸிடமும் தோற்கவேண்டும். இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் தொடரில் தோற்கவேண்டும்.

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

எனவே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலாவது ஜெயித்தால் மற்ற அணிகளின் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் ஃபைனலுக்கு முன்னேறலாம். அப்படியில்லையென்றால், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், இலங்கை - நியூசிலாந்து தொடர்களின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். 

இப்போதைக்கு இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios