Asianet News TamilAsianet News Tamil

AUS vs SA: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26 தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுவது ஏன் தெரியுமா..?

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் நிலையில், அதற்கான காரணத்தை பார்ப்போம். 
 

explainer about boxing day test which starts on december 26 in melbourne
Author
First Published Dec 26, 2022, 4:14 PM IST

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்கும் டெஸ்ட் போட்டி  பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய காமன்வெல்த் நாடுகளிலும் டிசம்பர் 26ம் தேதி டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் மெல்பர்ன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

அந்தவகையில், டிசம்பர் 26ம் தேதியான இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. 

டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தை பார்ப்போம். பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த ”பாக்ஸிங் டே” உருவானது. இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு கிஃப்ட்டுகளை பாக்ஸில் வைத்து வழங்குவர். இந்த தினத்தில் ஊழியர்களுக்கு அவர்களது எஜமானர்களிடமிருந்து கிறிஸ்துமஸ் கிஃப்ட் பாக்ஸ் கிடைக்கும். 

IPL 2023: பஞ்சாப் கிங்ஸுக்கு வலுசேர்க்கும் சாம் கரன்.. உத்தேச ஆடும் லெவன்

இந்த பாக்ஸிங் டே உருவானதில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் பங்கு உண்டு. ஆண்டு முழுவதும் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26ம் தேதி ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதனால் தான் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios