- Home
- Sports
- Sports Cricket
- அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!
Hardik Pandya's 16-Ball Fifty: 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அதற்கு பிறகு ஒரு இந்திய வீரரின் அதிவேக அரை சதம் இதுதான்.

இந்தியா ரன்கள் குவிப்பு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி அரைசதங்களால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு வெறும் 44 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்ட்யா
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சிதறடித்த பாண்ட்யா, கடைசி ஓவரில் டீப் மிட்-விக்கெட்டில் கேட்ச் ஆனார். அவர் வெறும் 25 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் நொறுக்கினார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரரின் இரண்டாவது வேகமான அரை சதம் இதுவாகும்.
அபிஷேக் சர்மா சாதனை காலி
2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அதற்கு பிறகு ஒரு இந்திய வீரரின் அதிவேக அரை சதம் இதுதான். இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா அரை சதம் அடித்து இருந்தார். ஹர்திக் பாண்ட்யா அவரின் சாதனைகளை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளார்.
இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் வேகமான அரைசதங்கள்
இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் வேகமான அரைசதங்கள் அடித்த வீரர்களின் லிஸ்ட்:
யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் vs ENG, டர்பன், 2007 WC
ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் அரை சதம் vs SA, அகமதாபாத், 2025*
அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் vs இங்கிலாந்து, வான்கடே, 2025
KL ராகுல் 18 பந்துகளில் அரை சதம் vs SCO, துபாய், 2021
சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரை சதம் vs SA, குவஹாத்தி, 2022

