Asianet News TamilAsianet News Tamil

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 189 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலிய அணி.
 

cameron green 5 wickets haul helps australia to restrict south africa for just 189 runs in first innings of second test
Author
First Published Dec 26, 2022, 2:54 PM IST

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸுக்கு வலுசேர்க்கும் சாம் கரன்.. உத்தேச ஆடும் லெவன்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, தியூனிஸ் டி ப்ருய்ன், டெம்பா பவுமா, காயா ஜோண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் எல்கர் (26), எர்வீ (18) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ப்ருய்ன்(12), பவுமா(1), ஜோண்டோ(5) ஆகிய மூவரும் சொதப்பினர். அதன்பின்னர் கைல் வெரெய்ன் மற்றும் மார்கோ யான்சென் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். 52 ரன்கள் அடித்த வெரெய்ன் மற்றும் 59 ரன்கள் அடித்த யான்சென் ஆகிய இருவரையும் கேமரூன் க்ரீன் வீழ்த்தினார். கடைசியில் ரபாடா மற்றும் இங்கிடி ஆகியோரையும் க்ரீன் வீழ்த்த, 189 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டானது.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் ரூ.17.5 கோடி கொடுத்து எடுத்த ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அரைசதம் அடித்த வெரெய்ன், யான்சென் ஆகிய இருவரையும் க்ரீன் தான் வீழ்த்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios