ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!

கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் ஒவரின் 2ஆவது பந்திலேயே சிக்சர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார்.

England Player Jonny Bairstow hit His Cricket World Cup 2023 first six against New Zealand at Narendra Modi Stadium, Ahmedabad rsk

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பீல்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் கேன் வில்லியம்சன், இஷ் சோதி, டிம் சவுதி, லக்கி பெர்குசன் ஆகியோர் இடம் பெறவில்லை.

ENG vs NZ: கேன் வில்லியம்சன், டிம் சவுதி, இஷ் சோதி, பெர்குசன் யாருமே இல்லை; டாஸ் வென்ற நியூசி., பவுலிங்!

இதே போன்று இங்கிலாந்து அணியிலும், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி ஆகியோர் இடம் பெறவில்லை. இதையடுத்து, இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். இதில், 2ஆவது பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் சிக்ஸர் அடித்து அணியின் ஸ்கோரை தொடங்கி வைத்ததோடு, உலகக் கோப்பைக்கான முதல் சிக்ஸரையும் தொடங்கி வைத்தார். மேலும், 5ஆவது பந்தில் பவுண்டரியும் விளாசி, பவுண்டரி கணக்கையும் தொடங்கி வைத்துள்ளார்.

 

நியூசிலாந்து:

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர், ஜேம்ஸ் நீசம், மேட் ஹென்றி, டிரெண்ட் போல்ட்

CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கிரேட் காளி!

இங்கிலாந்து:

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட்.

இரு அணிகளும் இதுவரையில் 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இங்கிலாந்து 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து 44 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டிகள் டையில் முடிந்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி டிராவில் முடியவே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து ஒரு விக்கெட் இழந்து 15 ரன்கள் எடுக்கவே, இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நரேந்திர மோடி மைதானம் ரெக்கார்ட்ஸ்:

இதுவரையில் 28 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளது. முதலில் பேட்டிங் பேடிய அணி 16 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 12 முறையும் வெற்றி பெற்றன.

அதிகபட்ச ஸ்கோர் – 365/2, 50 ஓவர்கள், தென் ஆப்பிரிக்கா – இந்தியா

குறைந்தபட்ச ஸ்கோர் 85/10, 30.1 ஓவர்கள், ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ்

சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 325/5 47.4 ஓவர்கள், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

குறைந்த ஸ்கோர் – 196/10, 48.3 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா

World Cup 2023: 10 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?

எதிர்பார்ப்பு:

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் –ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – அடில் ரஷீத் அல்லது சாம் கரண்

நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டெவோன் கான்வே அல்லது டாம் லாதம்

நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – டிரெண்ட் போல்ட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios