உலகக் கோப்பையில் இடம் பெற்ற 10 அணிகளும் எப்படி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது. ஐ.சி.சி., உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடை யிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7' அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன. மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

World Cup 2023: உலகக் கோப்பைக்கான தொடக்க விழா ரத்து: கேப்டன்களின் அணிவகுப்பு மட்டுமே நடைபெற வாய்ப்பு?