Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

உலகக் கோப்பைக்கான கேப்டன்ஸ் டே மீட்டிங்கின் போது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா நன்றாக அசந்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

South Africa Captain Temba Bavuma Sleeping During Captains Meet Event at Ahmedabad rsk

இந்தியா நடத்தும் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.

India vs South Korea: கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி; பதக்கம் உறுதி!

குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸின் Banquet Hallல் வைத்து கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாபர் அசாமிடம் ஹைதராபாத் பிரியாணி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரியாணி நன்றாக இருந்ததாகவும், இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வே இல்லை என்றும், தங்களுக்கு தங்களது நாட்டில் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Dhoni and Ram Charan: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தோனி – ராம் சரண் கூட்டணி: வைரலாகும் புகைப்படம்!

ரோகித் சர்மாவிடம் பத்திரிக்கையாளர் CWC 2019 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே கோப்பை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, அது என்னுடைய வேலை இல்லை என்பது போன்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவருக்கு புரியும் படி இந்த கேள்வியை மொழி பெயர்த்துள்ளார்.

World Cup, Captains Day 2023: கேப்டன்ஸ் டேக்கு தயாரான குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸ்!

இந்த நிலையில், தான் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா கண் அசந்து தூங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர், இப்படியொரு கேப்டனை வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி என்ன செய்யப் போகிறது என்று விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் விளையாடுகிறது. அதுமட்டுமின்றி மூவர்ண நிறம் கொண்ட ஜெர்சியுடன் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேப்டன்ஸ் டே மீட்டிங்கானது தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடி தளத்திலோ ஒளிபரப்பு செய்யப்படவோ லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படவோ இல்லை.

Ahmedabad, Captains Day Celebration: தனி விமானத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

 

உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள்:

இந்தியா – ரோகித் சர்மா

இலங்கை – தசுன் ஷனாகா

ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ்

நியூசிலாந்து – கேன் வில்லியம்சன்

இங்கிலாந்து – ஜோஸ் பட்லர்

பாகிஸ்தான் – பாபர் அசாம்

வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன்

தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா

ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி

நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios