Asianet News TamilAsianet News Tamil

Ahmedabad, Captains Day Celebration: தனி விமானத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

கேப்டன்ஸ் டே இன்று நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனி விமானம் மூலமாக ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டு அகமதாபாத்திற்கு வந்துள்ளார்.

Pakistan Captain Babar Azam Came From Hyderabad to Ahmedabad in A Special Plane for World Cup Captains Day event at Narendra Modi Stadium rsk
Author
First Published Oct 4, 2023, 1:00 PM IST

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. நேற்றுடன் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் முடிந்த நிலையில், உலகக் கோப்பை நாளை தொடங்குகிறது.

Pakistan vs Australia: நாள்தோறும் ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுகிறோம் – கேப்டன் ஷதாப் கான் ஜாலியான பேச்சு!

ஐசிசி கேப்டன்ஸ் டே:

ஐசிசி கேப்டன்கள் தினம் அக்டோபர் 4 புதன்கிழமை இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் கேப்டன்கள் தினம் நடைபெறுகிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை முதல் போட்டி தொடங்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தான் கேப்டன்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அகமதாபாத்திற்கு வந்துள்ளார். இதே போன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அகமதாபாத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று, நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Captains Day: கேப்டன்ஸ் டே எங்கு, எப்போது கொண்டாடப்படுகிறது? உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்!

இதன் மூலமாக விளையாடிய 2 வார்ம் அப் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், குஜராத் கிரிக்கெட் சங்க கிளப் கிளப்ஹவுஸின் Banquet Hallல் வைத்து கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக, பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், ஹைதராபாத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு தற்போது அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரோகித் சர்மாவை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத் வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு: புன்சிரிப்புடன் நடந்து செல்லும் வீரர்கள்!

டிவி அல்லது ஆன்லைன்/ஸ்ட்ரீமிங்கில் ரசிகர்கள் கேப்டன் தினத்தை எங்கு பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்களை ஐசிசி வெளியிடவில்லை. எனினும் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செயப்படுகிறது. அதோடு, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

World Cup Free Tickets: உலகக் கோப்பையில் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு வழங்க முடிவு!

உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள்:

இந்தியா – ரோகித் சர்மா

இலங்கை – தசுன் ஷனாகா

ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ்

நியூசிலாந்து – கேன் வில்லியம்சன்

இங்கிலாந்து – ஜோஸ் பட்லர்

பாகிஸ்தான் – பாபர் அசாம்

வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன்

தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா

ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி

நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் - ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடிக்கு கிடைத்த வெற்றி!

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios