Dhoni and Ram Charan: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தோனி – ராம் சரண் கூட்டணி: வைரலாகும் புகைப்படம்!

தோனி மற்றும் ராம் சரண் இருவரும் பெப்ஸி விளம்பரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

MS Dhoni meets Actor Ram Charan in Mumbai Picture goes viral in social media rsk

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் தெலுங்கு நடிகர் ராம் சரண் இருவரும் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து பெப்ஸி விளம்பரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மும்பையில் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர்.

World Cup, Captains Day 2023: கேப்டன்ஸ் டேக்கு தயாரான குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸ்!

மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு ராம் சரண் சென்றிருந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ராம் சரணுக்கு கோயில் குருக்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரணுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ராஜமௌலியின் RRR படத்திற்கு பிறகு சரண் நடிப்புக்கு நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.

Ahmedabad, Captains Day Celebration: தனி விமானத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுரேஷ் ரெய்னாவாக சரண் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவை வதந்திகளாக மாறியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரு விளம்பரத்தில் நடிக்கத் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பரம் எப்போது வெளியாகும் என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Pakistan vs Australia: நாள்தோறும் ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுகிறோம் – கேப்டன் ஷதாப் கான் ஜாலியான பேச்சு!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios