உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் WWE இன் முன்னாள் சூப்பர் ஸ்டார் தி கிரேட் காளி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டிக்கு முன்னதாக, 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் நேற்று நடந்தது. குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸில் நடந்த இந்த மீட்டிங்கில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன் பிறகு உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொடுத்தனர். அதன் பிறகு WWE இன் முன்னாள் சூப்பர் ஸ்டார் தி கிரேட் காளி மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

England vs New Zealand 1st Match: பென் ஸ்டோக்ஸ் விலகல்? யாரை களமிறக்க போகிறது இங்கிலாந்து?

அப்போது காளிக்கு, உலகக் கோப்பை 2023 டிஷர்ட்டை பரிசாக கொடுத்துள்ளார். இந்த நிலையில், தான் இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் காளி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENG vs NZ: 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்க்குமா நியூசிலாந்து? அகமதாபாத்தில் ENG vs NZ பலப்பரீட்சை!

நேற்று நடந்த 10 அணிகளின் கேப்டன்களின் போட்டோஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா, சென்னையில் உள்ள அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்குகிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி சென்னையில் வரும் 8ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

Scroll to load tweet…