Asianet News TamilAsianet News Tamil

ENG vs NZ: கேன் வில்லியம்சன், டிம் சவுதி, இஷ் சோதி, பெர்குசன் யாருமே இல்லை; டாஸ் வென்ற நியூசி., பவுலிங்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

New Zealand won the toss and choose to field first against England in 1st match of Cricket World Cup 2023 at Ahmedabad rsk
Author
First Published Oct 5, 2023, 1:56 PM IST

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில், இங்கிலாந்து மற்று நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கிரேட் காளி!

நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஏற்கனவே கேன் வில்லிசம்சன் முழங்கால் அறுவை சிகிச்சை வலி காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகினார். இதே போன்று டிம் சவுதியும் விலகியிருந்தார். இந்த நிலையில், லக்கி பெர்குசன், இஷ் சோதி ஆகியோரும் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. இதே போன்று இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, கஸ் அட்கின்சன், டேவிட் வில்லி ஆகியோரும் இடம் பெறவில்லை.

ENG vs NZ: 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்க்குமா நியூசிலாந்து? அகமதாபாத்தில் ENG vs NZ பலப்பரீட்சை!

நியூசிலாந்து:

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர், ஜேம்ஸ் நீசம், மேட் ஹென்றி, டிரெண்ட் போல்ட்

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

இங்கிலாந்து:

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட்.

இரு அணிகளும் இதுவரையில் 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இங்கிலாந்து 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து 44 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டிகள் டையில் முடிந்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.

World Cup 2023: 10 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி டிராவில் முடியவே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து ஒரு விக்கெட் இழந்து 15 ரன்கள் எடுக்கவே, இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நரேந்திர மோடி மைதானம் ரெக்கார்ட்ஸ்:

இதுவரையில் 28 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளது. முதலில் பேட்டிங் பேடிய அணி 16 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 12 முறையும் வெற்றி பெற்றன.

அதிகபட்ச ஸ்கோர் – 365/2, 50 ஓவர்கள், தென் ஆப்பிரிக்கா – இந்தியா

குறைந்தபட்ச ஸ்கோர் 85/10, 30.1 ஓவர்கள், ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ்

சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் – 325/5 47.4 ஓவர்கள், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

குறைந்த ஸ்கோர் – 196/10, 48.3 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா

Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

எதிர்பார்ப்பு:

இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் –ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – அடில் ரஷீத் அல்லது சாம் கரண்

நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டெவோன் கான்வே அல்லது டாம் லாதம்

நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்று வீரர் – டிரெண்ட் போல்ட்

Follow Us:
Download App:
  • android
  • ios