ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூலமாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான விஜயகுமார் வைஷாக் டெல்லி அணிக்கு எதிராக 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய டெல்லி அணி ஆரம்பம் முதலே சொதப்பி கடைசியாக 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியில் அறிமுகமான விஜயகுமார் வைஷாக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெல்லி அணியின் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர், அக்ஷர் படேல் மற்றும் லலித் யாதவ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பெங்களூரு வீரர் ரஜத் படிதாருக்குப் பதிலாக இந்த சீசனில் வைஷாக் விஜயகுமார் இடம் பெற்றுள்ளார்.
IPL 2023: ஓவரா ஆட்டம் போட்ட விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற சவுரவ் கங்குலி; வைரலாகும் வீடியோ!
யார் இந்த விஜயகுமார் வைஷாக் ?
கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். இவருக்கு வயசு 26. கர்நாடகா அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
மீடியம் ஃபாஸ் பவுலராக சிறந்து விளங்குகிறார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களிலும், போட்டியின் முடிவிலும் பந்து வீசுபவராக அறியப்படுகிறார்.
IPL 2023: 5 போட்டியில் தோற்றால் என்ன, நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு போவோம்: டேவிட் வார்னர் நம்பிக்கை!
லிஸ்ட் ஏ கிரிக்கெட்
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி அலுரில் நடந்த ஒடிசாவிற்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணிக்காக விளையாடினார். இது தான் அவரது முதல் போட்டி. இதில், 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டி20 கிரிக்கெட்:
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் தேதி கவுகாத்தியில் நடந்த போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக கர்நாடகா அணிக்காக விளையாடினார். இதில், 15 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்:
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ரயில்வே அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக அறிமுகமானர். 10 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடிய விஜயகுமார் வைஷாக் 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் 2023:
நடப்பு ஆண்டின் 16ஆவது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமான விஜயகுமார் வைஷாக் விஜயகுமார், டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதுவும் தான் பிறந்து வளர்ந்த ஊரில் நடந்த போட்டியில் இடம் பெற்று ஆர்சிபி அணிக்காக 4 ஓவர்கள் வீசி 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
