IPL 2023: டாஸ் போட வரும் ஹர்மன்ப்ரீத் கவுர்; மகளிர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி அணிந்து களமிறங்கும் ரோகித் படை!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மகளிர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி அணிந்து விளையாட இருக்கின்றனர்.

MI vs KKR more than 19 thousand young girls will cheer Mumbai Indians at Wankhede Stadium in IPL 2023

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான 22ஆவது போட்டி இன்று நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் வியக்கத்தக்க நிகழ்வுகள் இன்றைய போட்டியில் நடைபெற இருக்கிறது. முக்கியமாக இன்றைய போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின் போது ரோகித் சர்மா உடன் இணைந்து மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் வருகை தர இருக்கிறார். அதோடு, 36 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 200 குழந்தைகளின் ஆரவாரத்துடன் இந்த போட்டி நடைபெற உள்ளது.

IPL 2023: ஓவரா ஆட்டம் போட்ட விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற சவுரவ் கங்குலி; வைரலாகும் வீடியோ!

அதுமட்டுமின்றி, இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாட இருக்கின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் அனைவருக்கும் விளையாட்டு என்பதை மையப்படுத்தி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இப்படியொரு ஏற்பாட்டை செய்துள்ளது. இதன் காரணமாக என்ஜிஓக்களில் இருந்து குழந்தைகள் அழைத்து வரப்பட்டு இந்தப் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IPL 2023: 5 போட்டியில் தோற்றால் என்ன, நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு போவோம்: டேவிட் வார்னர் நம்பிக்கை!

 

 

இது குறித்து பேசிய நீதா அம்பானி கூறியிருப்பதாவது: விளையாட்டு மீதான பெண்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும். இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரீமியர் லீக் மூலமாக, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு  தொடக்கம் கிடைத்தது. பெண் கல்வி மற்றும் விளையாட்டு மீதான பெண்களின் ஆர்வத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டுக்கான ESA நிகழ்வை பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

IPL 2023: 2 போட்டிகளில் 0, மொத்தமே 10; வீணாகும் ரூ.5.5 கோடி; விமர்சனத்திற்கு உள்ளான தினேஷ் கார்த்திக்!

இந்தப் போட்டியை காண வரும் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோரை அழைத்துச் செல்ல 2000க்கும் அதிகமான தன்னார்வலர்களுடன் 500 தனியார் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் உணவு பெட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ESA டிஷர்ட்டுகளை பயன்படுத்தும் வகையிலும், இந்தப் போட்டியில் அவர்கள் அவர்களே உருவாக்கும் வாசகம் எழுதிய போர்டையும் காண்பிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: எல்லா நேரமும் ரிங்கு சிங்கால் எப்படி ஆட முடியும்; பவுலிங்கில் சொதப்பி விட்டோம்: நிதிஷ் ராணா!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios