டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

Scroll to load tweet…

IPL 2023: 5 போட்டியில் தோற்றால் என்ன, நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு போவோம்: டேவிட் வார்னர் நம்பிக்கை!

பின்னர், இந்த மைதானத்திற்கு எளிய ஸ்கோரான 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட டெல்லி கேபில்டஸ் அணி களமிறங்கியது. இதில், பிருத்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டில் வெளியேறினார். புது மாப்பிள்ளை மிட்செல் மார்ஷ் டக் அவுட்டில் வெளியேற, அடுத்து வந்த யாஷ் துல் 1 ரன் என்று வரிசையாக ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்பாக ஆடி 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெள்யேறினர்.

IPL 2023: 2 போட்டிகளில் 0, மொத்தமே 10; வீணாகும் ரூ.5.5 கோடி; விமர்சனத்திற்கு உள்ளான தினேஷ் கார்த்திக்!

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5ஆவது தோல்வியாகும். டெல்லி அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் அமன் கான் ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி உள்பட அங்கு அமர்ந்திருப்பவர்களை வம்பிழுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அங்கு டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங், சவுரங் கங்குலி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதோடு, அவர்களை முறைத்துக் கொண்டுள்ளார்.

IPL 2023: எல்லா நேரமும் ரிங்கு சிங்கால் எப்படி ஆட முடியும்; பவுலிங்கில் சொதப்பி விட்டோம்: நிதிஷ் ராணா!

Scroll to load tweet…

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இறுதியில் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை கொடுத்தனர். அப்போது, சவுரங் கங்குலி ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அவர் விராட் கோலிக்கு மட்டும் கை கொடுக்கவில்லை. அப்படியே ஒதுங்கி சென்றுவிட்டார். போட்டியில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். ஆனால், அந்த போட்டியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடாது. ஆனால், விராட் கோலி இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டதால் சவுரங் கங்குலி இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது 
Ganguly மற்றும் Virat Kohli என்ற பெயரில் டிரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…