IPL 2023: 5 போட்டியில் தோற்றால் என்ன, நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு போவோம்: டேவிட் வார்னர் நம்பிக்கை!
ஐபிஎல் 2023 தொடரில் 5 போட்டிகளில் தோற்றால் கூட நாங்கள், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ்
ஐபிஎல் 2023 தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களது வெற்றியை பதிவு செய்து அடுத்தடுது கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 5 போட்டியிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ்
எளிதில் வெற்றி பெறும் போட்டியிலும் கூட டெல்லி அணி தோற்றது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ்
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். டுப்ளெசிஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மஹிபால் லோம்ரார் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 5ம் வரிசையில் இறக்கிவிடப்பட்ட ஹர்ஷல் படேலை 6 ரன்களுக்கு அக்ஸர் படேல் வீழ்த்த, அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் (24) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.
டெல்லி கேபிடல்ஸ்
ஷபாஸ் அகமது 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இம்பேக்ட் பிளேயராக இறக்கிவிடப்பட்ட அனுஜ் ராவத் 22 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி. 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர்.
டெல்லி கேபிடல்ஸ்
பிரித்வி ஷா(0), மிட்செல் மார்ஷ்(0), யஷ் துல்(1), டேவிட் வார்னர்(19) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். தனி ஒருவனாக நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த மனீஷ் பாண்டேவும் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல்(21), நோர்க்யா(23) ஆகியோர் ஓரளவிற்கு ஆடியும் டெல்லி அணியால் 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டெல்லி கேபிடல்ஸ்
இந்தப் போட்டியில் மணீஷ் பாண்டேயின் விக்கெட் தான் திருப்பு முனையாக அமைந்தது.வனிந்து ஹசரங்கா ஓவரில் மணீஷ் பாண்டே எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்ய சொன்னார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் அதையே சொன்னார்.
டெல்லி கேபிடல்ஸ்
அதன் பிறகு ஃபாஃப் டுப்ளெசிஸ் டிஆர்எஸ் அப்பீல் செய்யவே, டிவி ரீப்ளேயில் அவுட் என்று தெரியவரவே, கள நடுவர் அவுட் கொடுத்தார். அவர் அவுட்டாகும் போது டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிடல்ஸ்
கடைசியாக 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் அறிமுகமான விஜய்குமார் வைஷாக் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார். ஆர்சிபி அணியுடனான தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியிருப்பதாவது: டாஸ் போடும் போது பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினேன்.
டெல்லி கேபிடல்ஸ்
ஆனால், ஆரம்பத்திலேயே பேட்டிங்கில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளோம். எளிதில் ஜெயிக்க வேண்டிய போட்டியில் கூட நாங்கள் தோல்வியை தழுவினோம். ஆர்சிபி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்.
டெல்லி கேபிடல்ஸ்
அடுத்த போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு மீண்டு வருவோம். தொடக்க நன்றாக இருந்தால் தான் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்று தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி கண்ட அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி இருக்கிறது. அதே போன்று நாங்களும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிடல்ஸ்
வரும் 20 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 24 ஆம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 29ஆம் தேதியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.