Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: 2 போட்டிகளில் 0, மொத்தமே 10; வீணாகும் ரூ.5.5 கோடி; விமர்சனத்திற்கு உள்ளான தினேஷ் கார்த்திக்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.

RCB Wicket Keeper Dinesh Karthik Golden Duck against Delhi Capitals in 20th Match IPL 2023
Author
First Published Apr 15, 2023, 5:41 PM IST | Last Updated Apr 15, 2023, 5:41 PM IST

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி தற்போது பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே ஷாக் தான். கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு அதிரடி காட்டிய விராட் கோலி புல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் 82 (நாட் அவுட்), 21, 61, 50 என்று மொத்தமாக 214 ரன்கள் குவித்துள்ளர்.

IPL 2023: எல்லா நேரமும் ரிங்கு சிங்கால் எப்படி ஆட முடியும்; பவுலிங்கில் சொதப்பி விட்டோம்: நிதிஷ் ராணா!

இவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் கூட சிக்ஸர் அடிக்க, தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கடந்த ஆண்டு ஆர்சிபி அணி அவரை ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இந்த ஆண்டு அவரை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், இதுவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.

கையில் குளோஸ், தலையில் ஹெல்மெட், காலில் பேடு கட்டி பயிற்சியில் ஈடுபட்ட ரிக்கி பாண்டிங் மகன்: வைரலாகும் வீடியோ!

ஆனால், அதில் தினேஷ் கார்த்திக் மட்டும் 0, 9, 1 (நாட் அவுட்), 0 என்று மொத்தமாக 10 ரன்கள் எடுத்து மோசமான சாதனை படைத்திருக்கிறார்.  கடந்த போட்டியில் லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் ரன் மூலமாக தினேஷ் கார்த்திக் விக்கெட் எடுத்திருந்தால் சூப்பர் ஓவருக்கு ஆர்சிபி சென்றிருக்கும். ஆனால், அவர் ரன் அவுட் வாய்ப்பை கோட்டைவிடவே, லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெவ்ற்றி பெற்றது.

IPL 2023: லக்னோ பிட்சா? அப்ப சரி தான், பஞ்சாப் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios