Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: லக்னோ பிட்சா? அப்ப சரி தான், பஞ்சாப் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு!

லக்னோ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 21 ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

LSG and PBKS Probable Playing XI for today 21st Match in IPL 2023 at Ekana Cricket Stadium Lucknow
Author
First Published Apr 15, 2023, 1:43 PM IST | Last Updated Apr 15, 2023, 1:43 PM IST

லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 21ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று 4 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

IPL 2023: துஷார் தேஷ்பாண்டே தலைமையில் நடந்த பட்டிமன்றம்; தமிழ் புத்தாண்டை அலப்பறையாக கொண்டாடிய சிஎஸ்கே டிவி!

பலம் வாய்ந்த லக்னோ அணியில் கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆயுஷ் பதோனி என்று நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று மார்க் வுட், ரவி பிஷ்னாய், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் பந்து வீச்சில் பக்கபலமாக இருக்கின்றனர். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் ஷிகர் தவான், ஜித்தேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் கரன் ஆகியோர் பேட்டிங்கிலும், அர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் பந்து வீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IPL 2023: ஓ இது பெங்களூரா? அப்போ டெல்லிக்கு தான் வாய்ப்பு: இதுவரையில் 10ல் தான் ஜெயிச்சிருக்கு!

ஆகையால், இந்தப் போட்டி கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் போட்டி லக்னோவில் நடப்பதால், பஞ்சாப் அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டுமே மோதியுள்ளன. கடந்த சீசனில் நடந்த போட்டியில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த 7 ஆம் தேதி லக்னோவில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது. தற்போது லக்னோவில் நடக்கும் 2ஆவது போட்டியில் லக்னோ அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கண்டிப்பாக இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி அதிக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு உதாரணமே, ஹோம் மைதானங்களில் நடந்த முதல் போட்டியில் அந்த அணியும், 2ஆவது போட்டியில் எதிரணியும் தான் வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை சொல்லலாம்.

IPL 2023: ரூ.13.25 கோடின்னா சும்மாவா; அதுக்கான ஆட்டத்த காட்ட வேணாமா? காதலிக்கு ட்ரீட் கொடுத்த ப்ரூக்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உத்தேச ஆடும் 11:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக், திபக் கூடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஜெயதெவ் உனத்கட், அமித் மிஷ்ரா அல்லது ஆயுஷ் பதோனி, (இம்பேக்ட் பிளேயர்), ஆவேஷ் கான், மார்க் வுட், ரவி பிஷ்னாய்.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச ஆடும் 11:

பிராப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பனுகா ராஜபக்‌ஷா அல்லது ராகுல் சகார் (இம்பேக்ட் பிளேயர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரண், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், கஜிகோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios