IPL 2023: துஷார் தேஷ்பாண்டே தலைமையில் நடந்த பட்டிமன்றம்; தமிழ் புத்தாண்டை அலப்பறையாக கொண்டாடிய சிஎஸ்கே டிவி!
தமிழ் புத்தாண்டு தினத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பட்டிமன்றம், சோறு தான் முக்கியம், ராசி பலன் என்று பல நிகழ்ச்சிகள் மூலமாக சிறப்பாக கொண்டாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளும் ஹோம் மைதானங்களிலும், வெளி மைதானங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. அதுவரையிலும் சிஎஸ்கே அணிக்கு எந்த போட்டியும் இல்லை. இந்த நிலையில், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோவையும் சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
IPL 2023: ஓ இது பெங்களூரா? அப்போ டெல்லிக்கு தான் வாய்ப்பு: இதுவரையில் 10ல் தான் ஜெயிச்சிருக்கு!
இந்த வீடியோவில் புத்தாண்டு சிறப்பு நிகச்சிகள் என்றால், என்னென்ன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதற்கான ஒத்திகை நடந்தது. அதில், காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை அந்த வீடியோவில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக காலை 7. 30 மணிக்கு ரஷீத் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரது மங்கள இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
அதன் பிறகு காலை 8 மணிக்கு அதிரடி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டின் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்? என்ற ராசிபலன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
காலை 9.30 மணிக்கு மேட்சை கடைசி பந்து வரை எடுத்து செல்வது சரியா? தவறா? என்ற தலைப்பில் துஷார் தேஷ்பாண்டே தலைமையில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.
பிற்பகல் 12 மணிக்கு சோறுதான் முக்கியம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
பிற்பகல் 1.30 மணிக்கு சிங்க பாதை என்ற தலைப்பில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
அதன் பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு மஞ்சள் மாயாஜாலம் என்ற தலைப்பில் மாயாஜால நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிற்பகல் 3.30 மணிக்கு அன்புடன் சேப்பாக்கம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
மாலை 7 மணிக்கு ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரவு 8 மணிக்கு ‘அதிரடி நிறைவு’ என்ற தலைப்புடன் அந்த வீடியோ முடிகிறது.
அதோடு மற்றொரு வீடியோவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு கொள்ளும் வீடியோவையும் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. ஒன்றாக அனைவரும் உணவு உட்கொள்கிறார்கள் என்ற தலைப்பில் அந்த வீடியோவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்டனர். வேறு எந்த அணியும் செய்யாத புது வகையில் இப்படியொரு நிகழ்ச்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.