கையில் குளோஸ், தலையில் ஹெல்மெட், காலில் பேடு கட்டி பயிற்சியில் ஈடுபட்ட ரிக்கி பாண்டிங் மகன்: வைரலாகும் வீடியோ!
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகன் பிளெட்சர் வில்லியம் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் தனது மகன் பிளெட்சர் வில்லியம் பாண்டிங் உடன் விராட் கோலியை சந்தித்தார்.
IPL 2023: லக்னோ பிட்சா? அப்ப சரி தான், பஞ்சாப் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு!
கோலியை கண்டவுடன் பிளெட்சருக்கு வெட்கம் வந்துவிட்டது. அதன் பிறகு பிளெட்சரின் கையை பிடித்துக் கொண்டு ரிக்கி பாண்டிங் விராட் கோலியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இதே போன்று மற்றொரு வீடியோவில் கையில் குளோஸ், தலையில் ஹெல்மெட், காலில் பேடு கட்டுக் கொண்டு ரிக்கி பாண்டிங்கின் மகன் வலைபயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தனது மகனுக்கு அவரே பவுலிங் போடுகிறார். ஒவ்வொரு பந்தையும் அசால்ட்டாக விளாசுகிறார். அதுமட்டுமின்றி அவர் விளையாடுவதைப் பார்த்த ரிக்கி பாண்டிங், எங்களுக்காக விளையாடுகிறாயா? செலக்ஷன் டீமில் சேர்ந்துவிடுகிறாயா? என்றெல்லாம் மகனிடம் கேட்டுள்ளார். இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
IPL 2023: ஓ இது பெங்களூரா? அப்போ டெல்லிக்கு தான் வாய்ப்பு: இதுவரையில் 10ல் தான் ஜெயிச்சிருக்கு!