பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் லீக் போட்டிகளுடன் வெளியேறிவிட்டன. இதில், பாகிஸ்தானுக்கு 2 கோடியே 20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் அரையிறுதிப் போட்டி தொடங்க இருக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறன. இந்த நிலையில், தான் உலகக் கோப்பையில் சாம்பியனாகும் அணிக்கும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால், அரையிறுதிக்கு கூட செல்லாத அணிக்கும் கூட ஐசிசி பரிசுத் தொகையை வாரி வழங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு 2 கோடியே 20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்ட இருக்கிறது. ஒரு லீக் போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.35 லட்சம் என்றும், லீக் போட்டியோடு வெளியேறினால் ரூ.80 லட்சம் என்று அனைத்து அணிகளுக்கும் பரிசு தொகை அறிவித்துள்ளது.
ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!
அதன்படி இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. ஆதலால் பாகிஸ்தானுக்கு 2 கோடியே 20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதே போன்று இந்த தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்த இங்கிலாந்து அணிக்கும் ரூ.80 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 2 கோடியே 20 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. அதோடு, புள்ளிப்பட்டியலில் கடைசி 3 இடங்களை பிடித்த வங்கதேசம், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தலா 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யாருக்கு வாய்ப்பு?