ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நினைத்தால் அது நடக்காது – அப்துல் ரசாக்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை குறி வைத்து தாக்கும் வகையில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Former Cricketer Abdul Razzaq gives derogatory statement against Aishwarya Rai rsk

இந்தியாவில் நடந்து வந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற பாகிஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடைசியாக கிடத்த அரையிறுதி வாய்ப்பையும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோட்டைவிட்டு பரிதாபமாக வெளியேறியது.

ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!

இந்த நிலையில் தான் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அப்துல் ரசாக் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டால், நல்ல மற்றும் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது மட்டும் நடக்காது என்று பேசியுள்ளார்.

இதையடுத்து அருகிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான ஷாகித் அஃப்ரிடி மற்றும் உமர் கில் இருவரும் கை தட்டி பாராட்டு தெரிவித்ததோடு, சிரிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் யாருக்கு வாய்ப்பு?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios