30 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது ஒருநாள் போட்டி பாதிக்குமா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chances of rain in Brian Lara Stadium and WI vs IND 3rd ODI match may affected due to rain?

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று வெற்றி பெற்றி தொடரில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இரவு டிரினிடாட் மைதானத்தில் நடக்கிறது.

மேஜர் லீக்கில் அதிரடி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பிய நிக்கோலஸ் பூரன்!

டிரினிடாட்டின் தாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் முதல் முதலாக ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதுவரையில் ஆண்களுக்கு ஒரு நாள் போட்டி நடக்கவில்லை. ஆனால், மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இதில், சேஸிங் செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது. இதுவரையில் இந்த மைதானத்தில் 3 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்: மைதானத்திற்கு வந்த 6 அடி நீளமுள்ள பாம்பை வெளியேற்றிய நடுவர்கள்!

இதில் முதல் பேட்டிங் செய்த அணி ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பின்னர் 2ஆவதாக ஆடிய அணி 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக இலங்கை மகளிர் அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

Eng vs Aus 5th Test: போராடி தோற்ற ஆஸ்திரேலியா: தொடரை 2-2 என்று சமன் செய்த இங்கிலாந்து!

பிரையன் லாரா மைதானமானது சுழற்பந்துக்கு சாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடினால் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் டாஸ் ஜெயிக்கும் அணி கண்டிப்பாக பவுலிங் தேர்வு செய்ய வேண்டும்.

கேப்டனாக திரும்ப வந்த ஜஸ்ப்ரித் பும்ரா; ருதுராஜ் துணை கேப்டன்: அயர்லாந்துக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு!

இந்த மைதானம் ஓரளவு மேகமூட்டமாகவும், பகுதி நேரம் வெயிலாகவும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்யக்கூடும் என்றும், பிற்பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மணிக்கு 11 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமன் ஆகும்.

தோனியின் முதலீட்டு நிறுவனங்கள்: ட்ரோன், கதாபுக், 7 இங்க் ப்ரீவ்ஸ், ஸ்போர்ட்ஸ்ஃபிட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios