Asianet News TamilAsianet News Tamil

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 10 ஸ்லாட்: ஆஸி வீராங்கனை ஃபோப் லிட்ச்பீல்டை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்த குஜராத்!

மகளிர் பிரீமியர் லீக் 2ஆவது தொடருக்கான ஏலம் மும்பையில் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Australian Batter Phoebe Litchfield Sold to Gujarat Giants for Rs 1 Crore in WPL 2024 Auction rsk
Author
First Published Dec 9, 2023, 3:40 PM IST

ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கும், மகளிர் பிரீமியர் லீக் (Womens Premier League (WPL)) டபிள்யூ.பி.எல் தொடர் நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியனானது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்றது.

BAN vs NZ 2nd Test: கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டம் – 2ஆவது டெஸ்டில் நியூசி., வெற்றி!

இதைத் தொடர்ந்து 2ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கான ஏலம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 165 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 104 இந்திய வீரர்களும், 15 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 61 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

MI அணியில் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, சொதப்பியதால் வெளியேற்றப்பட்ட வீர்ரகள் யார் யார்?

ஒவ்வொரு அணியிலும் 30 இடங்கள் உள்ளன. இதில், 9 வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நடந்து வரும் ஏலத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 10 ஸ்லாட் காலியாக உள்ளது. அந்த 10 இடங்களுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுக்கிறது. தற்போது தொடங்கிய ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயதான ஃபோப் லிட்ச்ஃபீல்டை ரூ.1 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் இடையில் கடும் போட்டி நிலவிய நிலையில் கடைசியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி இவரை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது.

BCCI Net Worth Value: பிசிசிஐயின் சொத்து மதிப்பு ரூ.18,760 கோடி – இது ஆஸ்திரேலியாவை விட 28 மடங்கு அதிகம்!

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

ஆஷ்லே கார்ட்னர்*, பெத் மூனி*, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட்*, ஷப்னம் ஷகில், சினே ராணா, தனுஜா கன்வர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

அனாபெல் சதர்லேண்ட்*, அஷ்வனி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம்*, ஹர்லி காலா, கிம் கார்த்*, மான்சி ஜோஷி, மோனிகா பட்டேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேகனா, சோபியா டன்க்லே*, சுஷ்மா வர்மா.

பர்ஸ் தொகை:

குஜராத் ஜெயிண்ட்ஸ் - ரூ.5.95 கோடி

யுபி வாரியர்ஸ் - ரூ.4 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.3.35 கோடி

டெல்லி கேபிடல்ஸ் - ரூ.2.25 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ.2.1 கோடி

இங்கு * வெளிநாட்டு வீராங்கனைகளை குறிக்கிறது.

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios