காயத்தோடு விளையாடிய நாதன் லயான்; ஆஸ்திரேலியா 370 ரன்கள் எடுத்து ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 279 ரன்கள் எடுத்து 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நின்னு நிதானமாக ஆடிய அருண் கார்த்திக், என்.எஸ்.ஹரிஷ்; நெல்லை 159 ரன்கள் குவிப்பு!
இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி 416 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், பென் டக்கெட் 98 ரன்கள் சேர்த்தார். ஹாரி ப்ரூக் 50 ரன்கள் சேர்த்தார். ஜாக் கிராவ்லி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 77 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லபுஷேன் 30 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக காலில் காயம் ஏற்பட்ட நிலையில் கட்டு போட்டு வெளியில் இருந்த நாதன் லயான், மைதானத்திற்கு நொண்டி நொண்டி நடந்து வந்தார்.
சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!
கடைசியாக, 13 பந்துகள் பிடித்து ஒரு பவுண்டரி அடித்துக் கொடுத்து நாதன் லயான் ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 279 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. தற்போது வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 3 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும், ஜோ ரூட் 18 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!
தற்போது பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் நின்று விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ளது. இன்னும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரின் 2ஆவது வெற்றியையும் பெறும். நாளை முழுவதும் இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் நின்றால் போட்டி டிரா ஆகும்.
சன்னி சந்து அதிரடி: சேலம் ஸ்பார்டன்ஸ் 155 ரன்கள் குவிப்பு!