Asianet News TamilAsianet News Tamil

தீட்டு என்பது என்ன? இறைவனுக்கு எந்த தீட்டு ஆகாது?

தீட்டு என்றால் என்ன என்பது குறித்த உண்மையான அர்த்தத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இறை வழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் என்றல்லாம் உள்ளன.

What is defamation? God can not be defiled?
Author
First Published Oct 17, 2022, 11:47 PM IST

காலங்காலமாக தீட்டு என்பது பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் தீட்டு என்பது என்ன என்றும், இந்த சொல் இதைக் குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே கையாளப்பட்டு வருகிறது. தீட்டு என்றால் என்ன என்பது குறித்த உண்மையான அர்த்தத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இறை வழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் என்றல்லாம் உள்ளன. ஆனால் அவை நாம் நினைப்பது போன்று அல்ல..  முன்னோர்கள் கூறும் தீட்டுக்களுடன் நம்மால் இறைவனை நெருங்க முடியாது.

குறிப்பாக தீட்டு என்றதுமே அனைவரின் நினைவிற்கு வருவது மாதவிடாய் தான். அன்றைய காலங்களில் இருந்து கடைபிடிக்கப்படும் தீட்டாக மாதவிடாய் உள்ளது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களை தெய்வ வழிப்பாடுகளில் இருந்து தள்ளியே வைப்பார்கள். ஆனால் உண்மையாக அதனை ஆராய்ந்து பார்த்தால் மாதவிடாய் நேரங்களில் பெண்களின் உடலில் அதிகப்படியான உஷ்ணம் அதாவது வெப்பம் ஆனது ஏற்படும் என்றும், இதில் ஆலயங்களுக்கு வரும்போது கருவறையில் இருக்கும் கடவுளின் வெப்பம் சேர்ந்து அவர்களை தாக்கும் போது அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாய் தான் பெண்களை மாதவிடாய் காலங்களில் கோவிலில் இருந்து விலக்கி வைத்தார்கள். அது தீட்டிற்காக இல்லை.

அதேபோன்று தான் வீடுகளில் புதிதாக குழந்தை பிறந்தால், அந்த வீட்டார்கள் யாரும் கோவிலுக்கு வரக்கூடாது. புரோகிதர்கள் வைத்து தீட்டு கழித்த பின்னரே கோவிலுக்கு செல்ல வேண்டும். அதுவரையில் வெளியாட்கள் கூட அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தால், அந்த தீட்டாய் உடனடியாக கழிக்க வேண்டும். இதையும் தீட்டு என்று தான் சொல்கிறார்கள். ஆனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றும் கூறுகிறார்கள். அப்படியிருக்க பிறந்த குழந்தை எப்படி தீட்டாகும். அதனால் இதுவும் தீட்டு இல்லை.

அடுத்து ஆண் - பெண் உறவு. ஆண் பெண் இருவரும் கலப்பது தீட்டு என்று கூறுகிறார்கள். அப்படியிருந்தால் குளித்து முடித்த பின்னரே வீடுகளில் இருக்கும் வேலைகளை செய்ய வேண்டும். இந்த முறை காலங்காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் உருவாவது இது போன்ற கலப்பிலேயே.. அதனால் மனிதர் உருவாக காரணமாய் இருக்கும் இந்த முறையை எப்படி தீட்டு என்று அழைப்பது. ஆதலால் இதுவும் தீட்டு கிடையாது. அதேபோன்று மனிதர் இறந்ததும் அவரது உடலை தீட்டு என்று அழைக்கிறார்கள். ஆனால் இவையும் தீட்டு இல்லை.

வீட்டில் துர்சக்திகள் வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

இவையனைத்தும் தீட்டு இல்லை என்றால் எதைத்தான் முன்னோர்கள் தீட்டு என்று கூறினார்கள். முதலில் காமம். காமம் என்பது ஆசை. நாம் ஏதேனும் பொருள் மீது ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே மாறி விடுகின்றோம். அடுத்து குரோதம். அப்படியென்றால் கோபம். அடுத்து லோபம் என்கிற சுயநலமும், மதம் என்கிற கர்வமும், இறுதியாக, மாற்சரியம் என்கிற பொறாமை ஆகிய ஐந்தும் இறைவனுக்கு ஆகாது. இந்த ஐந்து தீட்டுகளை தான் மாபெரும் தீட்டுகள் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 

பெண்ணோ அல்லது பொருளோ அதன் மீது அளவுக்கடந்த ஆசையை வைத்து விட்டு அதனை அடைந்தே தீர வேண்டும் என்று சதா சர்வ காலமும் இறைவனை நினைக்கக் கூட நேரமில்லாமல் மனம் முழுக்க அதையே நினைத்து வாழ்வது காமத்தீட்டு. இது இறைவனுக்கு ஆகாத தீட்டு. அதேபோன்று கோபத்தை விட கொடியது இவ்வுலகில் ஏதுமில்லை. சுய அறிவை இழந்து, நம்மை சுற்றியிருப்பவர்கள் தாய் தந்தையராக இருப்பினும் கொடூரமாக பேசுவதும், உணர்ச்சி வசப்பட்டு வன்மத்தோடு நடந்து கொள்பவர்களும் இறைவனை நினைக்க மாட்டார்கள். இந்த குரோதத்தீட்டு இறைவனுக்கு ஆகாதது.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. ஏன் தெரியுமா?

மேலும் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை வழிகளிலும் அதர்மம் செய்தாவது தனது சுயநலம் மட்டும் கார்த்திக் கொண்டு பொருள் ஈட்ட நினைப்பார்கள். மனம் முழுக்க தன்னலம் இருக்கும் போது இறை நலம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இத்தகைய சுய நலமிக்க தீட்டும் இறைவனுக்கு ஆகாது. தாம்தான் பெரியவன் என்ற கர்வம் கொண்டு, பிறரை துன்புறுத்தியே மகிழ்ச்சி காணுவான். இறைவனை நினைக்கவே இயலாத இத்தகைய மதத்தீட்டை கொண்டவனும் இறைவனுக்கு ஆகாத தீட்டை உடையவன் தான்.

பிறர் வாழ்வதை பொறுக்காமல் மனதுக்குள் குமுறும் எண்ணத்தைக் கொண்டவன் மாற்சரிய தீட்டைக் கொண்டிருக்கிறான். எப்போதும் எரிச்சலும், பிறரை பார்த்து புகைவதும், என்றிருப்பவனால் இறைவனை தூய்மையாக நினைக்க முடியாது ஆக இவனும் இறைவனை அண்ட முடியாத தீட்டை உடையவன். இந்தத் தீட்டுகளைக் கொண்டிருப்பவனைத் தீண்டத்தகாதவனாக இறைவனே ஒதுக்கி விடுவதால் நாம் இறைவனை நெருங்க தீட்டில்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios