Asianet News TamilAsianet News Tamil

சும்மா சொன்னதையே சொல்லாதீங்க – எரிச்சலான தேர்தல் ஆணையர்கள்…

The irritated election commissioners have suggested not to mention the argument to hasten the argument.
The irritated election commissioners have suggested not to mention the argument to hasten the argument.
Author
First Published Nov 1, 2017, 5:17 PM IST


இரட்டை இலை விவகாரத்தில் டி.டி.வி தரப்பு வழக்கறிஞர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையர்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் ஒபிஎஸ்க்கும் சசிகலா தரப்பு டிடிவிக்கும் போட்டி ஏற்பட்டது.

இதனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதையடுத்து ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் கைகோர்த்தனர். ஆனால் டிடிவியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இதைதொடர்ந்து டிடிவி தனி அணியாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்ற 4 கட்ட விசாரணை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது.

இன்று 5 கட்ட விசாரணை நடைபெற்று வருகின்றது. 3 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதாடி வருகின்றார்.

ஆனால் அதிமுகவில் இருந்து எடப்பாடி தரப்பினர்தான் நீக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இதனால் எரிச்சல் அடைந்த தேர்தல் ஆணையர்கள் சொன்னதையே சொல்லாமல் வாதத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios