மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது புள்ளனேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வைரவன். இவரது மனைவி சவுமியா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண்குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் மார்ச் 2ம் தேதி மர்ம முறையில் குழந்தை இறந்ததை அடுத்து சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது தெரிய வந்தது.

image

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெண் சிசு கொலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், 'பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது.

தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்..! திருக்குறளை மேற்காட்டிய ஆளுநர் தமிழிசை..!

 

மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது. கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் #பெண்குழந்தைகள்பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!