Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பேருந்துகளில் அதிரடி கட்டணக் குறைப்பு..! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி..!

பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் கட்டணங்கள் வியாழக்கிழமை முதல் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

ticket rate of government buses in vilupuram division was reduced
Author
Villupuram, First Published Mar 6, 2020, 12:39 PM IST

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போக்குவரத்துக்கு கழகத்தில் 8 கோட்டங்கள் இருக்கின்றன. அதன்கீழ் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் விழுப்புரம் கோட்டத்தில் தான் அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு சென்னை, விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 4300 பேருந்துகள் வரை இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

ticket rate of government buses in vilupuram division was reduced

இந்தநிலையில் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் கட்டணங்கள் வியாழக்கிழமை முதல் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. இரு இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.15-ஆகவும், மூன்று இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.10-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காகவும் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து இயக்கப்படும் பேருந்துகள் காலியாக செல்வதை குறைப்பதை பொருட்டும் வருவாய் ஈட்டும் வகையிலும் இம்முயற்சி முதல்வரின் பரிதித்துறையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..

pongal-bus

நெடுந்தொலைவு இயக்கப்படும் 700 பேருந்துகளில் மட்டும் குறைந்தபட்ச பயணக் கட்டணத்தை பரீட்சாா்த்த முறையில் குறைத்து எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விழுப்புரம் போன்றே மற்ற கோட்டங்களிலும் கட்டண குறைப்பு குறைப்பு குறித்து பரிசீலினைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பேருந்து கட்டணங்களை விலைவாசியை கருத்தில் கொண்டு தமிழக அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios