Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்தார் சசிகலா – அதிகாரப்பூர்வ பதவியேற்பு

sasikala at-rayapettah-admk-head-office
Author
First Published Dec 31, 2016, 12:25 PM IST


சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்க அலுவலகம் வந்தார்.

முதலமைச்சராகவும் , அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிச.5 அன்று உடல்நலக்குறைவால்மரணமடைந்தார். அதன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக யாரை தேர்வு செய்வது எனபது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

சசிகலா தான் பொதுச்செயலாளராகதேர்வு செய்யப்பட்வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். கடந்த 29 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று மதியம் 12.20 க்கு சசிகலா 6 வது பொதுச்செயலாளராக இன்று பதவி ஏற்கிறார். இதையடுத்து சரியாக 12 மணிக்கு போயஸ் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார். 

வழியெங்கும் அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். ராயபேட்டை அலுவலகத்துக்கு வந்த சசிகலா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது தொண்டர்கள் கோஷமிட்டனர். பின்னர் பொறுப்பேற்க அலுவலகத்திற்குள் சென்றார். 

அலுவலகத்தின் உள்ளே சென்ற சசிகலா ஜெயலலிதா ., எம்ஜிஆர் படத்தை வணங்கிவிட்டு  ஜெயலலிதா, எம்ஜிஆர் அமர்ந்த பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்தார். அங்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மதுசூதனன், தம்பிதுரை , ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்தினார்.

வழக்கமாக ஜடை போட்டு வரும்வி.கே.சசிகலா இன்று ஜெயலலிதா பாணியில் கொண்டை போட்டு கொண்டு வந்திருந்தார். 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios