சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணாமல் போனவர் என்கிற அடிப்படையில் தேடவில்லை. அவரைக் கற்பழிப்பு வழக்கில் தேடிவருகிறோம்’என்று சென்னை கிரைம் பிராஞ்ச் போலீஸார் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

முகிலன் தலைமறைவாகி இன்றோடு 105 நாட்கள் ஆன நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன இந்நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவிடாமல் இருக்க ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றொரு செய்தியும் நடமாடிக்கொண்டிருக்க, பிரச்சினையின் நாயகியாகிய  ஒரு பெண் தனது முகநூல் பக்கத்தில் முகிலன் குறித்த உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்திருந்தார். தன்னோடு மட்டுமன்றி மேலும் சில பெண்களுடம் முகிலனுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தேவைப்படும் சமயத்தில் அதுவும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்பதிவை ஒட்டி அப்பெண்ணிடம்  சிபிசிஐடி போலீஸார் அவரிடம் பலமுறை விசாரணை நடத்தி வந்தனர், இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக  முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த  வேறொரு பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

சமூக போராட்டங்களில் ஒன்றாக பங்கேற்ற போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி முகிலன் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக , அவருடன் போராட்டங்களில் கலந்துகொண்ட பெண், குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் முகிலன் மீது  ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.முகிலன் பிப்ரவரி 15 -ஆம் தேதி காணாமல்போன நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக முகிலனின் படங்களைப் பொது இடங்களில் ஒட்டித் தேட ஆரம்பித்திருக்கும் சென்னை கிரைம் பிராஞ்ச் போலீஸார் இம்முறை முகிலனை நேரடியாகக் கற்பழிப்புக் குற்றவாளியாக அறிவித்தே தேடிவருகிறோம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் படி முகிலன் தனது செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு மனித நடமாட்டங்கள் இல்லாத பகுதி ஒன்றில் பதுங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.