MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரம்மாண்ட இயக்குனர் வீட்டு திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை- அதன் விலை இத்தனை லட்சமா

பிரம்மாண்ட இயக்குனர் வீட்டு திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை- அதன் விலை இத்தனை லட்சமா

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் அண்மையில் நடந்த நிலையில், அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2024, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் தற்போது தமிழில் ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு படங்களிலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதுமட்டுமின்றி இந்தியிலும் அவர் நடிப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது. அப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இது தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை அட்லீ தான் தயாரித்து வருகிறார். பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அதன் பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் அப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... முதன்முதலில் 1000 கோடி படம் கொடுத்த நடிகை இவர்தான்.. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நடிகை..

34

இப்படி பிசியான ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அண்மையில் இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த சேலை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. பார்க்க செம்ம கிராண்ட் ஆக இருந்த அந்த சேலையின் விலையை கேட்டால் தலைசுற்றிவிடும், அந்த அளவுக்கு காஸ்ட்லியாம். அந்த சேலையின் விலை பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

44

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஷங்கர் மகள் திருமணத்திற்கு அணிந்து வந்திருந்த சேலையில் விலை ரூ.3 லட்சமாம். பிரம்மாண்ட இயக்குனர் வீட்டு திருமணம் என்பதால் இவ்வளவு காஸ்ட்லியான சேலையை அணிந்து வந்திருக்கிறார் போல தெரிகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கையோடு அந்த காஸ்ட்லி புடவையில் போட்டோஷூட்டும் நடத்தி இருக்கிறார் கீர்த்தி.

இதையும் படியுங்கள்... Sudha Kongara : தந்தையின் இடம்.. பிடிக்க தடுமாறும் வாரிசு நடிகர் - அதற்கான வாய்ப்பை கொடுப்பாரா சுதா கொங்கரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved