Asianet News TamilAsianet News Tamil

மோடியின் கருப்பு பண ஒழிப்பு திட்டம் தோல்வி - பாமக மாநாட்டில் தீர்மானம்

pmk demonetisation
Author
First Published Dec 30, 2016, 5:03 PM IST


பாமக சார்பில் சிறப்பு மாநாஅடு நடத்தப்பட்டது இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானமாக மோடி அரசின் கருப்பு பணதிட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு எந்த பயனையும் தரவில்லை. பழைய ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டிருந்த ரூ.1000, ரூ.500 தாள்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவை வரவு வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்ற மத்திய அரசின் திட்டம் தோல்வியடைந்து விட்டது.

மாறாக எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த 52 நாட்களாக பணப் புழக்கம் இல்லாததால் சிறு வணிகமும், அமைப்புசாரா சிறு தொழில்களும் அடியோடு அழிந்து விட்டன. 

வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள், அவசரத் தேவைக்காகக் கூட அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் சட்டம் &ஒழுங்கு பிரச்சினையாகும் ஆபத்து உள்ளது. 

இதைக் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்; வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை மத்திய அரசு நீக்க வேண்டும் இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios