கடந்த 15 வருடங்களாகவே திமுக தலைவர் ஆகி விடுவார் ஸ்டாலின் என தொடர்ந்து திமுக தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதோ இன்று ஆகி விடுவார் நாளை ஆகி விடுவார் என்று சொல்லி சொல்லியே ஓட்டிவிட்டார்கள். 

திமுக தலைவர் கருணாநிதியும் இறுதி வரை அதை விட்டு கொடுப்பதாக இல்லை. 94வது வயதில் உடல்நிலை காரணமாக பழையபடி கருணாநிதியால் பயணங்கள் செய்ய முடியவில்லை.

இந்த நிலைலயில் திமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் கட்சியின் பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின், செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு பொறுப்பை ஏற்பார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த இளைஞரணி செயலாளர் பதவியை, திருச்சி அன்பில் மகேஷுக்கு விட்டு கொடுக்கப்போவதாகவம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து பதவி உயர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் கனிமொழிக்கோ, காலியாக உள்ள துணை பொது செயலாளர் பதவி அளிக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆவதன் மூலம் தளபதி என்ற பழைய பெயர் நீக்கப்பட்டு, புதிய அடைமொழி பட்டமும் அளிக்கப்படுகிறது. அந்த புதிய பட்டத்துடனும், புதிய பொறுப்புடனும் மீண்டும் மக்களை சந்திக்க புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ள புதிய பட்டமும், பொறுப்பும் எந்த அளவுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.