Election: ராகுல் காந்தி தொகுதியில் பரபரப்பு!! யாரும் வாக்களிக்கக் கூடாது.. மாவோயிஸ்ட் துப்பாக்கியுடன் மிரட்டல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர். 

Maoist request to people of Wayanad constituency to boycott elections KAK

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7  கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த வாரம் ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகின்ற 26 ஆம் தேதி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில்  நடைபெறுகிறது.

இதனையடுத்து தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.  பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  இதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களத்தில் உள்ளனர். 

R.B.Udayakumar arrested : முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் திடீர் கைது.. அதிமுகவினர் அதிர்ச்சி

Maoist request to people of Wayanad constituency to boycott elections KAK

வயநாடு தொகுதியில் மாவோயிஸ்ட்

ஸ்டார் தொகுதியாக உள்ள  வயநாடு தொகுதிக்குட்பட்ட தேயிலைத் தொட்ட பகுதிகளில் இன்று காலை மாவோயிஸ்டுகள் பொதுமக்களை சந்தித்துள்ளனர்.  சுமார் 4  பேர்கொண்ட குழுவினர் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அப்போது  தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களே கேட்டுக் கொண்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அராசங்கள்  மக்களுக்கான எந்த எந்த வித அடிப்படை வசதிகளும்  திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.  எனவே தேர்தலில் வாக்களிக்க கூடாது. தேர்தலை புறக்கணியுங்கள்  என கூறிவிட்டு சென்றுள்ளனர். 

 

துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்- போலீசார் விசாரணை

இந்த வீடியோ கட்சியை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் வந்து சென்ற பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் துப்பாக்கியுடன் வெளியான உருவம் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Polling day : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... சம்பளத்துடன் பணியாளர்களுக்கு விடுப்பு-தமிழக அரசு அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios