சர்ச்சை நடிகையும் மாடலுமான மீராமிதுன் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டிருப்பது வைரலாகி வருகிறது. 

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர் நடிகை மீராமிதுன். கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். இந்நிலையில் அவர் சீமானை சந்தித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

அதனைப்பார்த்த பலரும் அதிர்ச்சியாகி வருகின்றனர். காரணம், மீராமிதுனின் பழக நடவடிக்கைகள் அப்படி. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று இவர் வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது சேரன் உடைந்து கண்ணீர்வடித்தார். இதைக் கண்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றினர். வெளியேறும்போது கூட அவர் சேரன் மீது பழிசுமத்தினார்.