காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் மனுதர்மம் என்னும்  சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி, 24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ் நாடெங்கும் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.தனது ட்விட்டர் பக்கத்தில், ’அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம். ஆயிரம் தலைமுறை இழிவைத் துடைப்போம்’’ எனக்கூறி மனுதர்மம் நூலில் இருந்து சில அத்தியாயங்களை பதிவிட்டுள்ளார். 

அதில்,  ’’ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால் , சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகி விடுவர்’’என்றும், பெண்கள் அழகைப்பற்றி கவலைப்படுவதில்லை. வயதை பற்றியும் அக்கறை இல்லை. ஆணாக இருந்தால் போது, அழகாக இருப்பினும் அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்க மாட்டார்கள்’’ என்கிறார். 

கணவன் சூதாடுகிறவனாயினும், குடிகாரனாயினும், பிணியாளனாகினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், படுக்கை, ஆடை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்’ என மநுஸ்மிருதி கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும் அவர்களை தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாக செய்வர் மாதர் ‘’ எனக் கூறப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

இதற்காக திருமாவளவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ‘’மனு தர்மம் 1000 ஆண்டுக்கு முன்னர் எழுதியது. அதை இப்ப யாருடா பின்பற்றாங்க? 99.9% இந்துக்கள் மனு தர்மம் படித்ததில்லை. உன் வினை உன்னை அறுக்கும் நாள் தூரமில்லை. கிறிஸ்தவரான திருமா திட்டமிட்டு அடிக்கடி இந்து மதத்தை இழிவு படுத்துகிறார். இந்து மதத்தை பற்றி கெட்ட அபிப்பிராயம் பரப்பி மூளை சலவை செய்து மதம் மாற்ற சதித்திட்டம். பைபிளை போதித்து மதம் மாற்றுவது எடுபடாததால் இது போன்ற குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்.

 

சாக்கடைகள் புண்ணிய தேசத்தின் தர்மத்திற்கு வகுப்பு எடுக்க வேண்டாம்! மத துவேசத்தையும், சாதி பிரச்சினைகளை தூண்டுவதே இந்த மத ஏஜெண்டுகள் தான்! எவனோ ஒருவன் எழுதியதை சனாதன தர்மத்தின் நூல் என எப்படி கூறுவாய்? என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.