Asianet News TamilAsianet News Tamil

பிளான் போட்டு கொடுத்த அமைச்சர்... எக்சிகியூடிவ் பண்ணிய பாஜக... அதிமுக கபட நாடகத்தை அரங்கேற்றிய வேல்முருகன்..!

கருப்பணனின் கடிதத்தை அப்படியே பின்பற்றி, திட்டத்தை நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவர வகை தேடிக்கொண்டது மத்திய அரசு. அதாவது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது. உடனடியாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க 50 கிணறுகளுக்கு அனுமதியும் அளித்துவிட்டது.

hydro carbon issue...AIADMK minister plan...bjp executive
Author
Tamil Nadu, First Published Jan 25, 2020, 3:19 PM IST

அமைச்சரின் ஒரே கடிதத்தால் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப் போகும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அதிமுக மற்றும் மத்திய அரசுகளின் நயவஞ்சகக் கூட்டால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் சட்டவிதிகள் குறுக்கே நின்றன. இந்நிலையில். தான் 2018-ம் ஆண்டில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், "ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பும் அதேசமயம் பெரும் அச்சமும் நிலவுகிறது. அதனால் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம். சுற்றுச்சூழல் அனுமதியும் கோர வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க;- உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டியே முருகா... நெல்லைக் கண்ணனை வீட்டுக்கே போய் சந்தித்த வேல்முருகன்..!

hydro carbon issue...AIADMK minister plan...bjp executive

கருப்பணனின் கடிதத்தை அப்படியே பின்பற்றி, திட்டத்தை நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவர வகை தேடிக்கொண்டது மத்திய அரசு. அதாவது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது. உடனடியாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க 50 கிணறுகளுக்கு அனுமதியும் அளித்துவிட்டது. இப்படிச் செய்தது மக்களுக்கு எதிரானதாகும். மாநில உரிமைக்கும் எதிரானதாகும். "இதை நாங்கள் எதிர்க்கிறோம், அதனால் அனுமதிக்க மாட்டோம்" என்று மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் அதிமுக அரசு!

இதையும் படிங்க;- மோடியையும், அமித்ஷாவையும் ஆட்டி படைக்கும் நாக்கால் நக்கும் கூட்டமே... ஈட்டியாய் தாக்கிய வேல்முருகன்..!

hydro carbon issue...AIADMK minister plan...bjp executive

ஆனால், எதிர்ப்போ வரவேற்போ எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவிட்டது அதிமுக அரசு. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என எடுத்துக்கொண்டுதான், மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது மத்திய அரசு. அப்படிச் செய்துவிட்டு, நேரடியாகவே ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திணிக்கவும் செய்துவிட்டது. அதிமுக அரசு அமைதி காத்ததே ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதித்ததாகிவிட்டது. இத்தனைக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம் என்று சட்டப்பேரவையிலேயே சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி அளித்திருந்தது அதிமுக அரசு. அது வெறும் கபட நாடகம்தான் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

hydro carbon issue...AIADMK minister plan...bjp executive

காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழக வேளாண் பகுதிகளை மட்டுமல்ல; தமிழகத்தையே சீரழித்துப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்தான இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். அதிமுக அரசும், இதனை உடனடியாகத் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. கருப்பணன் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப்போகும் ஹைட்ரோ கார்பன் திட்டம்! அதிமுக மற்றும் மத்திய அரசுகளின் நயவஞ்சகக் கூட்டால் விளைந்த இந்த திட்டத்தை விரட்டியடிப்போம்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios