பிரிட்டிஷ்காரன் போட்டிருந்த ஷூவை நக்கி நாக்கல் தடவி கொடுத்து எல்லா செய்து வந்த ஒரு கூட்டம் இங்கு உட்கார்ந்து கொண்டு பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் ஆட்டி வைக்கிறது என வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்;- உங்களவுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா, திமிரு இருந்தா கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்க்க வந்த ஒரு அருகம்புல்லு, ஒரு பூநூலை ஆயுதமாக வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் சொல்வதை கேட்டுகிட்டு யாரோடா மோதுறீங்க. யாரு இந்த நாட்டு அந்நியன். யார் இந்த நாட்டு வந்தேறி. யார் இந்த நாட்டுக்கு ஆட்சி அதிகாரம் செய்தவன். ஆனால், பிரிட்டிஷ்காரன் போட்டிருந்த ஷூவை நக்கி நாக்கல் தடவி கொடுத்து எல்லா செய்து வந்த ஒரு கூட்டம் இங்கு உட்கார்ந்து கொண்டு பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் ஆட்டி வைக்கிறது. 

எங்கள் அய்யா நெல்லை கண்ணன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இந்த பாஜகவையும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் எடப்பாடி மற்றும் தமிழக அமைச்சர்களை கழுவி ஊற்றியதை என் வரலாற்றில் நான் பார்த்ததில்லை. மேலும், உனக்கு எண்ண பாரம்பரியம் இருக்கிறது. சுதந்திர இந்திய விடுதலை போராட்டத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்து எங்கள் திப்பு சுல்தான் படை வால் கொண்டு வேல் கொண்டு போரிட்டான். இதுதொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஐதராபாத் போய் இந்த கும்பல் தெரிந்துகொண்டு வாங்க என்றார். இன்னும் மன்னர் பாரம்பரையின் அரண்மனையில் வரலாற்றில் செம்பேடுகளாக இருக்கிறது. அதற்கு இந்த ஆயுதமே சாட்சியாகும் என்றார்.