Asianet News TamilAsianet News Tamil

மிரட்டும் அவமதிப்பு வழக்கு – திரி கொளுத்திய திமுக "என்ன செய்யப் போகிறார் ஜார்ஜ்"

Chennai Metropolitan Police Commissioner George
chennai metropolitan-police-commissioner-george-in-cont
Author
First Published Mar 16, 2017, 3:49 PM IST


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னையச் சேர்ந்த தங்கவேலு என்பவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது.

chennai metropolitan-police-commissioner-george-in-cont

ஆனால் நீதிமன்ற உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஜார்ஜ் ஆஜராகாதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது ஜாரஜ் ஆஜராகததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இவ்வழக்கில் அவர் விசாரணைக்கு வருவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று தெரிவித்த அவர், மற்ற மாநில காவல்துறை அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகுவதாவும், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் விசாரணைக்கு வரத் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

chennai metropolitan-police-commissioner-george-in-contஇதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாமானதாகவும் நடைபெற காவல்துறை ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்படுவார் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios