எந்த திட்டமாக இருந்தாலும் சரி அது தேர்தல் அறிக்கையோ, அரசின் நலத்திட்டமோ தமிழகம் தான் முன்னோடியாக இருந்து கொண்டே வருகிறது. தமிழகத்தை பார்த்து தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு சான்று தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகம் போன்று மத்தியபிரதேசத்திலும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிப்8 தேதி டெல்லியில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கிறன்றது. அங்கு போட்டி ஆளும் பாஜகவிற்கும் ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே தான் கடுமையாக இருந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் பயங்கரவாதி என்று அமித்ஷா பேசும் அளவிற்கு டெல்லி தேர்தல் களம் அனலாய் பறந்து கொண்டிருக்கிறது. பாஜக வை பொறுத்தமட்டில் டெல்லியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. காரணம் டெல்லி தான் மத்திய அரசின் தலைநகர். ஆகவே மாற்று கட்சி டெல்லியை கைப்பற்றினால் எதிரும் ,புதிருமாக அரசியல் செய்ய வேண்டி இருக்கிறது என்று பாஜக நினைக்கிறது. ஆக இந்த டெல்லியை கைப்பற்ற திராவிடக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை கையிலெடுத்திருக்கிறது.

நேற்று பாஜக டெல்லியில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில்... பாஜக ஆட்சிக்கு வந்தால்  ஏழை எளிய மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை மாவு 2ருபாய்க்கு வழங்குவோம். மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வினியோகம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி திட்டம், அரசு பணியிடங்களை அதிகப்படுத்துதல் என அறிவித்திருந்தாலும் டெல்லி மக்களை கவரப்போகும் திட்டமாக பிஜேபி கருதுகிறது.

 பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும்  பிரிவினருக்கு இலவச சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர் வழங்குதல் டில்லி மும்பை இடையே உலகின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருக்கிறது பாஜக.
டெல்லியை மாற்றப்போவது பாஜக வா..? ஆம்ஆத்மி யா..?