துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...! 

துலாம் ராசி நேயர்களே..!

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நல்ல அனுபவமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். நவீன மின்னணு சாதனங்களை வாங்கி மகிழும் நாள். 

விருச்சிக ராசி நேயர்களே..!

இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். பால்ய நண்பர் ஒருவரை திடீரென சந்திப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

வாகனத்தை இயக்கும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உணவில் காரம் வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் உங்களுக்கு இருந்து வந்த நட்பில் சிறிய சங்கடம் ஏற்படும்.

மகர ராசி நேயர்களே..!

எதையும் தாங்கும் மனவலிமை கொண்டவர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன பராமரிப்பு மேற்கொள்ளும் நாள் இது.

கும்ப ராசி நேயர்களே..!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள் இது. உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து சந்திக்க நேரிடலாம்.

மீனராசி நேயர்களே..!

பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும் நாள் இது. புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து உங்களிடம் பேசுவார்கள்.