காஞ்சிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. சூறாவளி காற்றுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் இருந்த பல மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ள.

ஒரு சில பகுதிகளில் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த இந்த கனமழையால் காஞ்சிபுரம் மக்களே குளிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி ஒரு கோடையிலும் இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையா என வியந்து பார்க்கின்றனர் பொதுமக்கள்.

வீட்டிற்குள் புகுந்த மழை நீர் 

சூறாவளி காற்றுடன் மழை