Asianet News TamilAsianet News Tamil

Sex Secret 8: செக்ஸில் முழு திருப்தி அடையவில்லை..? உங்களை உச்சம் அடைய வைக்கும் 4 பெஸ்ட் சீக்ரெட்..!

Sex  Secret 8: இன்றைய பிஸியான வாழ்கை முறையில், தம்பதிகள் செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது, முழு திருப்தி அடையாமை, ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்த இயலாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். 

Four reasons why you DON'T want to have sex anymore
Author
Chennai, First Published Feb 27, 2022, 1:59 PM IST

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், தம்பதிகள் செக்ஸ் உறவில் ஈடுபடும் பொழுது, முழு திருப்தி அடையாமை, ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்த இயலாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உணவு கலாச்சாரம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவை பொதுவான காரணாமாக இருந்தாலும். தம்பதிகள், தங்களிடம் திருப்தியாக உடலுறவு கொள்ள முடியாததற்கு கீழ்க்கண்டவையும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

Four reasons why you DON'T want to have sex anymore

தேவையற்ற செல்போன் பயன்படுத்துதல் :

இன்றைய நவீன உலகில் செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, செல்போன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவோருக்கும்  பொருந்தும்.

தம்பதிகள் தங்களிடமே உடலுறவு வைத்துக்கொள்ளும் போதும் கூட செல்போன்களில் வரும் குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், அழைப்புகள் ஆகியவற்றின் மீது அதிக கவனத்தை செலுத்துவதால் செக்ஸ் மீது முழு கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், முடிந்தவரை தம்பதிகள் தாங்கள் உடலுறவில் ஈடுபடும்போது செல்போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், செல்போன்களை சைலண்ட் மோடில் வைப்பதும் மிகவும் சிறந்தது.

Four reasons why you DON'T want to have sex anymore

மன அழுத்தத்திலே இருப்பது:

மேற்கத்திய கலாசாரம், கொரோனா காலகட்டம் போன்றவை நமக்கு ஏராளமான மன அழுத்தத்தை வழங்கியுள்ளது. மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கு செக்ஸ் என்பது மிகச்சிறந்த நிவாரணம். ஆனால், தம்பதிகள் தங்களிடையே உடலுறவு கொள்ளும்போதும் மன உளைச்சல்கள், பிரச்சினைகள், சிக்கல்களை சிந்தித்துக் கொண்டிருந்தால் செக்ஸில் முழு திருப்தி அடைய முடியாது. இது ஏற்கனவே இருக்கும் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதனால், செக்சில் ஈடுபடும்போது தேவையற்ற கவலைகளை பற்றி சிந்திக்கக்கூடாது.

சினிமாவை பார்த்து அதிக எதிர்பார்ப்பு: 

செக்ஸ் என்பதை பொறுத்தமட்டிலே ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.இதை வரையறைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். இதனால், எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது என்று கூற முடியாது. அதேசமயத்தில், திரையில் பார்த்த ஆபாச படங்கள், செவி வழி கேட்ட கதைகள் ஆகியவற்றை வைத்து நேரிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளுடன் துணை நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.இதனால், இருவருக்கும் தேவையற்ற பிரச்சனை தான் வரும். 

உடற்பயிற்சி இல்லாமை: 

தம்பதிகளிடையே போதிய அளவு உடற்பயிற்சி இன்மையும் முழு திருப்தியுடன் செக்ஸில் ஈடுபட முடியாததற்கு ஒரு காரணம். காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதன்மூலம் ரத்த ஓட்டங்கள் சீராக உடலில் இருக்கும். நமது மனதிலும் புத்துணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். உடற்பயிற்சி இல்லாமலே இருந்து உடலுறவில் ஈடுபடும்போது முழு உத்வேகத்துடன் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

Four reasons why you DON'T want to have sex anymore

நேரடியாக உறவில் ஈடுபடாமல் தம்பதிகள் தங்களிடையே உறவுக்கு முந்தைய முத்தம், கட்டியணைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டால் இருவரின் உணர்ச்சிகளும் தூண்டப்படும். இல்லறம் செழிக்கும். தேவையற்ற எண்ணங்களை காய் விடுங்கள்.

மேற்கண்டவழிமுறைகளை நினைவில் கொண்டு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அதிக புரிதலுடன் உறவில் ஈடுபட்டால் நிச்சயம் முழு திருப்தி அடைய முடியும். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios