சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த ஒரு தொழிலதிபரின் திருமணத்தில் தங்க அரிவாள்மனை மற்றும் வெள்ளி பீரோ உள்ளிட்ட பல பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

முன்பெல்லாம் திருமணம் என்றால் மஞ்சள் பத்திரிக்கை அடித்து ஊர் ஊராக சென்று சொந்தபந்தங்களை பார்த்து நேரில் அழைத்து வரச் சொல்வார்கள். பின்னர் திருமணத்தின்போது தங்களால் இயன்ற பொருட்களை மணமக்களுக்கு சீர்வரிசை ஆக பெண்வீட்டார் கொடுப்பர். 

ஆனால் செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின் போது அழைப்பிதழ் கூட குறைந்தபட்சம் ரூபாய் 500 லிருந்து தொடங்கி லட்சங்களில் செலவு செய்கின்றனர். இந்நிலையில் காரைக்குடியை சேர்ந்த தொழிலதிபர் அவருடைய மகள் திருமணத்திற்கு ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் வெடி வைத்து கொண்டாடி அந்த ஊரையே மிரள வைத்து உள்ளார். 

மேலும் தங்க தம்ளர், செம்பு அரிவாள்மனை, தேங்காய் துருவி, வெள்ளி தங்க முலாம் பூசப்பட்ட பீரோ, என அனைத்தையும் சீர் வரிசையாக வைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.