ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாற்று திறனாளி பிச்சைக்காரார் ஒருவர் தனக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகவும் தான் வருடத்திற்கு 4 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி பலரை அதிர்ச்சியாக்கியுள்ளார். 

இந்தியாவில் ரயில் நிலையம், மற்றும் கோவில்களில் பிச்சை எடுத்து வரும் சில வசதி படைத்த பிச்சைக்காரர்கள், தங்களுக்கு தகுந்தது போல் ஏதேனும் தொழில் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சக்ராத்பூரில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் மாற்று திறனாளி சோட்டு பராக் என்பவர், வேஸ்டேஜ் என்ற முன்னணி சகாதார பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பனை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதாகவும் கூறி அதன் அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். 

மேலும் சிம்திகா மாவட்டத்தில் ஒரு பாத்திரக் கடையையும் இவர் வைத்துள்ளாராம். இதை இவருடைய மனைவிகள் தான் நிர்வகித்து வருகின்றனராம். 

இவர் நடத்தி வரும்,  தொழில்களில் இருந்து மாதம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை தொகை கிடைப்பதாகவும், எப்படிவும் வருடத்திற்கு 4 லட்சத்திற்கு மேல் பணம் வருவதாக கூறுகிறார்.

தன்னுடயை வாழ்கை குறித்து பேசியுள்ள சோட்டு, பிச்சை எடுத்த பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து வைத்து... சிறு தொழில் செய்ததாகவும் அதனை வைத்தே இந்த அளவிற்கு உயர்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய மூன்று மாணவிகள் குறித்து பேச மறுத்து விட்டார் இவர்.